கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் 500 மரச்செடிகள் நடத் திட்டம்
கோவில்பட்டி வட்டம், வில்லிசேரி கிராமத்திலுள்ள பொது இடங்களான மெய்த்தலைவன்பட்டி ஊரணி, வில்லிசேரி தெற்கு குளம்,ஸ்ரீ ராமர் குளம் ஆகிய இடங்களில் ஆலமரம், அரசு, புங்கை, தேக்கு, வேம்பு, வேங்கை, நாவல் போன்ற சுமார் 500 செடிகளை வில்லிசேரி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக நடவு செய்ய உள்ளோம். என்று வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவர் பி.காசிராஜன் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே, வில்லிசேரி கிராமத்தில் பசுமை போர்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு அய்யனார் ஊரணியில் செடிகள் வைக்கப்பட்டு இப்போது அடர்ந்த வனம் போல் காட்சி அளிக்கும் நிலை உள்ளது.அதே போல் மேற்சொன்ன இடங்களில் 2 நாட்களில் வைக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட உள்ளது.
பசுமையை ஏற்படுத்தும் நிலையில் இயற்கை சமநிலை ஏற்படவும், மழை வளம் பெருக்கவும், மண் வளம் உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்கனவே வில்லிசேரி ஊராட்சி பாடுபட்டு வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் எங்கும் நிழல் தரும் மரங்களும், பயன் தரும் மரங்களும் வளர்த்து, ஊர் உயர பாடுபடுவோம்.
மேற்படி மர கன்றுகள் ஒரு வார காலத்திற்குள் நடவு செய்யப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று பஞ்சாயத்து துணை தலைவர் பி.காசிராஜன் கூறி இருக்கிறார்.







