கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்க்ப்படுகின்றன. எப்போதும் பிசியாக இருக்கும் இந்த பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள், சுகாதார கேடுகள் போன்றவையும் அதிகம்.
இந்த நிலையில் பஸ் நிலையம் பராமரிப்பு பணிக்காக ஒரு பகுதி மூடப்பட்டு பகுதி பகுதியாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து மினி பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன, திருநெல்வேலி, தென்காசி செல்லும் பஸ்கள் பஸ் நிலையம் அருகே பார்க் முன்புறம் நின்று பயணிகள் ஏற்றி இறுக்கி செல்கின்றன,
இந்த நிலையில் பஸ் நிலையத்தின் உள் பகுதியில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தபணி முடிந்தபிறகு வேறு பகுதியில் பணி நடைபெறும். அதற்கு ஏற்றவாறு பஸ்கள் மாற்றி நிறுத்தப்படும். விரைவில் இந்த பணிகள் ,முடிவடைந்து பஸ் நிலையம் மறுபடியும் பழைய நிலையில் செயல்பட அனேகமாக இன்னும் ஒரு மாதம் வரை ஆகும் என்று தெரிகிறது.







