கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை 5 மணி நேரம் மழை
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் மழை பெய்யவில்லை. மேகம் கறுத்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை காலை 8 வரை நீடித்தது. கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளிலும் இது போல் சாரல் மழை பெய்தது. மழையினால் காலை நேரத்தில் மக்க்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் வாக்கிங் செல்வோர் சிரமம் அடைந்தனர்.
காலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு ஏற்றி இறக்குவதில் தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர்.
கோவில்பட்டி அருகே கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் இது போல் மழை பெய்தது. மலையை மறைக்கும் அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது.
நிறைய திருமணங்கள் நடந்தன. இதன் காரணமகாக கோவில் பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்ட்டது.தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
இதே போல் வானரமுட்டி, காமநாயக்கன்பட்டி பகுதியிலும் மழை பெய்தது. இந்த மழையானது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,