புஷ்பா 2′ படத்தின் சிறப்புக் காட்சி; கூட்ட நெரிசலில் பெண் பலி
![புஷ்பா 2′ படத்தின் சிறப்புக் காட்சி; கூட்ட நெரிசலில் பெண் பலி](https://tn96news.com/wp-content/uploads/2024/12/pushpa-2-rashmika-mandanna-16846340683x2-1-850x560.jpg)
கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2’ படம் உருவாகியுள்ளது.இப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தில் மைம் கோபி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ‘டான்சிங் குயின்’ நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார்.இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில், ‘புஷ்பா 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது .ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சி அதிகாலை திரையிடப்பட்டது
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/25574184-untitled-1.jpg)
இந்த நிலையில் ,ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்கச் சென்றபோது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண் உயிரிழந்துள்ளார் . உயிரிழந்த ரேவதியின் மகன் படுகாயங்களுடன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)