தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க மத்திய மந்திரியிடம் எம்பி கனிமொழி கோரிக்கை
கட்சத்தீவு அருகே கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த 10 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார்.
கடலோர காவல்படையினரால் லட்சத்தீவுகளின் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யவும், குஜராத், போர்பந்தர் அருகே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி கண்டுபிடித்து தர கோரியும், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.







