கோவில்பட்டி தொழில் அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமானவரி துறை சோதனை
கோவில்பட்டி கடலையூர் ரோடு பங்களா தெரு பகுதியை சேர்ந்தவர் மணி . இவர் .சிவந்திபட்டி – தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறாா். .=
மேலும் தட்டாா்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறாா். மேலும் மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சாா் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா் .
,புதன்கிழமை இவரது வீடு, ஆலை மற்றும் கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவில் உள்ள அலுவலகம் ஆகிய 3 இடங்களில் வருமான வரித்துறையினா் சுமாா் 10 போ் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,’
புதன்கிழமை பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது, வருமான வரித் துறையினர் சோதனை நிறைவடைந்துள்ளது
.சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலும் வருமானவரித் துறை வெளியிடவில்லை.







