கோவில்பட்டியில் தெருவுக்கு தெரு சுற்றித்திரியும் நாய்கள்; பொதுமக்கள் பீதி
கோவில்பட்டி நகர் முழுவதும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. ஒவ்வொரு தெருவிலும் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதை காணமுடிகிறது.
கோவில்பட்டி ராஜீவ் நகரில் திருப்பதி காலனி முதல் தெருவில் 10 முதல் 15க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன, தெருவில் தேங்கும் குப்பைகளை கிளறி சாலை முழுவதும் பரப்பி விடுகின்றன.
மேலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொல்ல்வதுடன் இடைவிடாது குறைக்கின்றன. அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகங்கக்ளில் செல்வோரை துரத்தி செல்வதை காணமுடிகிறது.
இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்கள் சாலையில் ஒரு வித பயத்தில் தான் செல்கிறார்கள். நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குறைபாடு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
நாய்க்கடியால் யாரும் பாதிக்ககூடாது என்பதை மனதில் கொண்டு கூட்டாமாக சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு போய் விடவேண்டும்அல்லது மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்/
கோவில்பட்டி நகராட்சி எல்லையில் பகுதிகள் மட்டுமின்றி கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இது பற்றி அந்தந்த ஊராட்சி தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,.