• June 8, 2025

‘நந்தன்’ படத்தை மனம் திறந்து பாராட்டிய ரஜினிகாந்த்

 ‘நந்தன்’ படத்தை மனம் திறந்து பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா.சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘நந்தன்’. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சசிகுமார்,பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பும் பாராட்டை பெற்றது.

ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம், அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது. ‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.‌ ரஜினிகாந்த் இந்த படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன், விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நந்தன் மிக தரமான..,தைரியமான.,படம்’ என மனம் திறந்து பாராட்டினார்.

இதனால் படகுழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘நந்தன்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *