ஆதார் கார்டு உண்மையானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி ?
ஆதார் கார்டு என்பது இந்தியாவில் அரசு சேவைகளைப் பெறுவதற்கும், வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கும், பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளத்தைச் சரிபார்க்கவும் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் முகவரி தொடர்பான தகவல்கள் இருக்கும்.
இது தனித்துவமான 12 இலக்க எண்ணாகும். சிலர் போலியாக ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுடைய நம்பகத்தன்மை குறித்து சரி பார்ப்பது முக்கியம். வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் வாடகைக்கு இருப்பவரின் ஆதார் கார்டு விவரங்கள் பெறப்படும்.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது, குத்தகைதாரரின் அடையாளத்தை சரிபார்க்க வீட்டு உரிமையாளர் ஆதார் கார்டை கேட்பார். பெரும்பாலான குத்தகைதாரர்கள் உண்மையான ஆதார் கார்டுகளை வழங்கினாலும், போலி ஆதார் கார்டுகளை வழங்குபவர்களும் உள்ளனர்.
ஏதேனும் சிக்கல்கள் அல்லது சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, உங்கள் வாடகைதாரர் வழங்கிய ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
ஆதார் கார்டின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது எப்படி?
ஸ்டெப் 1: உங்கள் வாடகைதாரர் வழங்கிய ஆதார் கார்டின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க முதலில் உங்கள் மொபைல் போனில் அதிகாரப்பூர்வ mAadhaar அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும்.
UIDAI-ஆல் உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், ஆதார் தொடர்பான சேவைகளை நிர்வகிக்கவும் சரிபார்க்கவும் உதவுகிறது.
ஸ்டெப் 2: அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டதும், ஆதார் கார்டு விவரங்களை சரிபார்ப்பதற்கான 2 விருப்பங்களைக் காண்பீர்கள்: QR குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்துதல் அல்லது ஆதார் நம்பரை கைமுறையாக என்டர் செய்தல்.
ஸ்டெப் 3: ஆதார் கார்டின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக மிகவும் எளிமையான வழி, அதில் அச்சிடப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்வதாகும். QR குறியீட்டை ஸ்கேன் செய்ய mAadhaar அப்ளிகேஷனில் உள்ள ஸ்கேனர் விருப்பத்தைப் பயன்படுத்தவும்.
இதில் ஆதார் கார்டு உண்மையானதா இல்லையா என்ற விவரங்களை mAadhaar அப்ளிகேஷன் உங்களுக்கு வழங்கும்.
ஸ்டெப் 4: நீங்கள் மாற்று வழியைப் பயன்படுத்தி, ஆதார் நம்பரை நேரடியாகச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இதை மட்டும் மறந்துடாதீங்க! இந்தப் படிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குத்தகைதாரரால் வழங்கப்பட்ட ஆதார் அட்டை உண்மையானதா என்பதைக் கண்டுபிடித்து மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையைச் சரிபார்ப்பது ஒரு நில உரிமையாளராக உங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய படியாகும்.







