கோவில்பட்டியில் 17 ஆண்டுக்கு பிறகு 100 மி.மீ.அளவை கடந்த மழை

கோவில்பட்டி முழுவதும் கடந்த 23-ந் தேதி சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இடியுடன் கன மழை கொட்டியது. குறுகிய நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை கோவில்பட்டியில் பதிவானது.
24 மணி நேரத்தில் கோவில்பட்டியில் 110 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழை, கடந்த 33 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில், ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச மழை ஆகும்.
கோவில்பட்டியில் கடந்த 33 ஆண்டுகளில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவுகள்:-
10-10-1992 – 125 மி.மீ
28-10-2006 – 122 மி.மீ
18-10-1994 – 114 மி.மீ
24-10-2024 – 110 மி.மீ
கோவில்பட்டியை பொறுத்தவரை 17 ஆண்டுக்கு பிறகு 100 மி.மீ.அளவு மழை பெய்து இருகிறது
24 மணி நேரத்தில், வரலாற்று சிறப்பு மிக்க மழையை பதிவு செய்துள்ள கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரும் நாட்களிலும் இடியுடன் கூடிய மழை தொடரும். என்று தூத்துக்குடி வேதர்மேன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
