• June 8, 2025

மகளிர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய வீராங்கனை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

 மகளிர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய வீராங்கனை அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை

Australia’s Megan Schutt bowls during the ICC Women’s T20 World Cup 2024 match between Australia and Sri Lanka at Sharjah Stadium, United Arab Emirates, Saturday, Oct. 5, 2024. (AP Photo/Altaf Qadri)

மகளிர் டி20 உலக கோப்பை 9-வது தொடர் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20-ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பெத் மூனி 40 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்னில் சுருண்டது.nஇதனால் ஆஸ்திரேலியா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் மகளிர் டி20 உலக கோப்பையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது மகளிர் டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை மேகன் ஷட் (46 விக்கெட்டுகள் படைத்துள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னம் இஸ்மாயில் (43 விக்கெட்டுகள்), 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் (41 விக்கெட்டுகள்), 4-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (40 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *