கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றியசெயலாளர் அழகர்சாமி ஏற்பாட்டில், நடந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், ஊத்துப்பட்டி கிராமத்தில் அதிமுக கொடியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்றஉறுப்பினர் கடம்பூர் ராஜூ ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கடம்பூர் ராஜு வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தலைமைக்கழக பேச்சாளர் மூர்த்தி,வழக்கறிஞர் அணி மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,ஜெ பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நீலகண்டன்,நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி,, வள்ளியம்மாள் மாரியப்பன், ஊத்துப்பட்டி ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார்,கிளைச்செயலாளர் ரவிக்குமார்,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அம்பிகைபாலன்,மகளிரணி கோமதி, ஒன்றிய மாணவரணி செயலாளர்கள் விக்னேஷ்,அல்லிதுரை, பஞ்சாயத்து துணைத்தலைவர் ரேவதி,மாணவரணி பொறுப்பாளர்கள் பிரவீன்குமார், அருண்குமார்,சுரேஷ்,வெங்கடேஷ்,யுவராஜ்,முரளிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







