குறுக்குசாலையில் 107 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணிதுறையின் மூலம் 76.73 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா], யூனியன் சேர்மன் திரு எல்.ரமேஷ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மேலும் 107 மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்கள்..
மற்றும் முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கம் விளையாட்டுப் பிரிவில் மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்…
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்த், பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் ஜான் ஜோசப் ,கிராம நிர்வாக அலுவலர் கீதா மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி, கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







