தூத்துக்குடியில் வசிப்பவர்கள் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வது எப்படி?
தூத்துக்குடி- திருநெல்வேலி பாசஞ்சர் ரெயிலில் ஏறி, மணியாச்சி சந்திப்பில் இறங்கினால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மாறிக் கொள்ளலாம் என்ற தகவலை பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலசங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
“வண்டி எண். 06667 தூத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு இரவு 8:25 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு சென்றடையும். தூத்துக்குடி திருநெல்வேலி பயணிகள் ரெயில் கட்டணம் ரூ. 20
தூத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி- திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் ஏறி, வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இறங்கினால் வண்டி எண். 16127 சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மாறிக் கொள்ளலாம்.
அதேபோல், வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு இரவு 8-09 மணிக்கு வரும் வண்டி எண். 16845 ஈரோடு-செங்கோட்டை விரைவு ரெயிலில் ஏறினால் திருநெல்வேலி (இரவு 8-50 மணி) சேரன்மகாதேவி (இரவு 9-12 மணி) கல்லிடைக்குறிச்சி (இரவு 9-22 மணி) அம்பாசமுத்திரம் (இரவு 9-27 மணி) கீழக்கடையும் (இரவு 9-42 மணி) பாவூர்சத்திரம் (இரவு 9-56 மணி)
தென்காசி (இரவு 10-10 மணி) செங்கோட்டை (இரவு 11.10 மணி) செல்லும் பயணிகள் தூத்துக்குடியில் இருந்து மேற்காணும் நகரங்களுக்கு நேரடி பயண சீட்டு பெற்றுக் கொண்டு பயணம் செய்து கொள்ளலாம்.
அதேபோல் வண்டி எண். 16846 செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரெயிலில் காலை 5-00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து ஏறினால் தென்காசி காலை (காலை5- 13 மணி) பாவூர்சத்திரம், கீழக்கடையம் (காலை 5-40 மணி) அம்பாசமுத்திரம்(காலை 5-51 மணி) கல்லிடைக்குறிச்சி (காலை 5-58 மணி) சேரன்மகாதேவி (காலை 6-05 மணி) திருநெல்வேலி (காலை 6:25 மணி வந்து, வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு 6-55 மணிக்கு வந்து சேரும்.
அதன் பின் வண்டி எண். 06668 திருநெல்வேலி- தூத்துக்குடி ரெயில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் 8-20 மணிக்கு புறப்படும். அந்த தூத்துக்குடி ரெயிலில் ஏறி தூத்துக்குடி மேலூருக்கு காலை 8-54 மணிக்கு வந்து விடலாம். தூத்துக்குடிக்கு 9:20 க்கு வந்து சேரும்.
தூத்துக்குடி மாநகர பயணிகள் மாலையில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, செங்கோட்டை செல்ல இந்த தூத்துக்குடி -திருநெல்வேலி தூத்துக்குடி -திருநெல்வேலி ரெயில்களை வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இணைப்பு ரெயில்களாக பயன்படுத்தலாம்.
மேற்காணும் நகரங்களுக்கு செல்ல தூத்துக்குடியில் இருந்து நேரடி பயணச்சீட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
திருநெல்வேலி- தூத்துக்குடி, திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் ரயில் ஞாயிறு மட்டும் இயங்காது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







