வயநாடு நிலச்சரிவில் இறந்ததாக கருதப்பட்ட சகோதரர், சகோதரிகள் உயிருடன் உள்ளனர்
கேரள மாநிலம் வயநாட்டில் 3 கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்தன. 250-க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கும் சூழலில் இன்னும் நிறைய பேர் மண்ணில் புதைந்து இருப்பதால் தேடுதல் பணி நேற்று 3 வது நாளாக நீடித்தது.
சூரல்மலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலான நிலையில், தாங்கள் பாதுப்புடன் இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் தீரஜ் என்பவர் நானும் எனது சகோதரிகள் 2 பெரும் இறந்து விட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. எனது சகோதரிகள் இருவரும் வெளியூரில் உள்ளனர். நானும் எனது தாயும் நிலச்சரிவில் சிக்கிகொண்டோம். மீட்பு குழவினர் எங்களை பதிரம்மாக மீட்டு முகாமில் சேர்த்தனர். தற்போது முகாமில் தங்கி இருக்கிறோம் இருக்கிறோம்.
இவ்வாறு தீரஜ் கூறினார்.