• May 5, 2024

கோடி கோடியாக சம்பளம் கொடுத்தாலும் அந்த காட்சிகளில்  நடிக்க மாட்டேன்- நடிகர் ராமராஜன் உறுதி

 கோடி கோடியாக சம்பளம் கொடுத்தாலும் அந்த காட்சிகளில்  நடிக்க மாட்டேன்- நடிகர் ராமராஜன் உறுதி

மக்கள் நாயகன் என்ற புகழப்பெற்ற நடிகர்  ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு. அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் சாமானியன் பட டிரைலர் சமீபத்தில் வெளியானது.அதையடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்கள் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.அந்த வகையில் ஆர் .ஜே. பாலாஜியின் எல்கேஜி பட வாய்ப்பை இவர் மறுத்திருக்கிறார். ஏனென்றால் இடைவேளைக்கு பிறகு தான் இவருடைய கதாபாத்திரம் வரும்படி இருந்ததாம்.

அதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளிவராமல் இருக்கும் பார்ட்டி படத்திலும் இவரை அணுகி இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் அதில் நடிக்க மறுத்திருக்கிறார்.

அதன் பிறகுதான் அப்படத்தின் போஸ்டரை பார்த்து நல்ல வேளை நான் நடிக்க வில்லை என சந்தோஷப்பட்டாராம். ஏனென்றால் அதில் மது, சிகரெட்  இருந்திருக்கிறது.

இந்த மாதிரி காட்சிகளில் எனக்கு கோடி கோடியாக சம்பளம் கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன். இதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன் என்று  அவர் தெரிவித்துள்ளார்.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *