• May 19, 2024

தூத்துக்குடி தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளின் நுண் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

 தூத்துக்குடி தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளின் நுண் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி பாரளுமன்ற தொகுதியில் 286 கவனிக்கத்தக்க வாக்குசாவடிகளும், 2  கூர் நோக்கக்கூடிய வாக்குசாவடிக்களுமாக மொத்தம் 288 பதற்றமான வககுசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குசாவடிகளில் 263 வாக்குசாவடி அமைவிடங்களும், 2 கூர்நோக்ககூடிய வாக்குசாவடி அமைவிடங்கள் என மொத்தம் 265 வாக்குசாவடி அமைவிடங்களும் அமைந்துள்ளன,

இந்த வாக்குசாவடி அமைவிடங்களில் ஒரு மத்திய அரசு பணியாளர் நுண் பணியாளராக இருப்பார். மேலும் மாநில, மதிய படை காவலர் ஒருவரும் பணியில் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால் ரேண்டம் முறையில் மொத்தம் 318 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்ட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வகையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தலைமையில் இந்த் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வாக்குபதிவு அன்று நுண் பார்வையாளர்கள் எவ்வாறு செய்லப்டவேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் எந்த மாதிரி நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி ஆட்சியர் லட்சுமிபதி விரிவாக விளக்கி பேசினார்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *