தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா , நடிகர் தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது தான் திரை உலகில் நுழைந்த தனுஷ் 23 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவுக்கு இவரைவிட 2 வயது அதிகம்.
தனுஷ் தனது கடின உழைப்பினால் கோலிவுட் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கால் பதித்து வெற்றி கண்டார்..
இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
அந்த பதிவில், “நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம்.இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.. தனுஷும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம், மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம்.” என்று கூறி இருந்தனர்,
இதை தொடர்ந்து இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு குடும்பங்களும் ஈடுபட்ட போதும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இப்போது விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். தங்களின் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
இருவருமே தங்களது முடிவில் உறுதியாக இருக்கின்றனர். ஆகையால் இவர்களின் விவாகரத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.. ஆனாலும் இத்தனை நாள் எப்படியும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரஜினி குடும்பம் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.