தேர்தல் என்றவுடன் மோடிக்கு தமிழ் மீது பற்று – கனிமொழி தாக்கு
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி தேர்தல் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
.பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது:-
:தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து , 2 மாநிலங்களில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் ஆனார், பதவிகளை ராஜினாமா செய்து இம்முறை இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு வெற்றியும் கிடையாது, ஆளுநர் பதவியும் கிடையாது, ஒன்றியத்தில் நமது ஆட்சி தான் அமைய போகிறது.
தேர்தல் என்றவுடன் மோடிக்கு தமிழ் மீது பற்று வந்துவிட்டது, ஒன்றிய நிதி எல்லாம் சமஸ்கிருத மொழிக்கு வழங்கி விட்டு, தேர்தல் சமயத்தில் மோடி, தமிழ் மொழி கற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது, பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்க வேண்டும்? நமது தலைவர் தொடுத்த வழக்கின் மூலம் ஆளுநர் தலையில் கொட்டு வைத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவிலே முதல் மாநிலம் நாம் தமிழ்நாடு தான், நம்மை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
மேலும் உழைக்கும் பெண்களுக்காக வசதிக்காக தோழி விடுதி அமைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கனிமொழி பேசினார்.