• May 19, 2024

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி

 நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அந்த போர்ஷன் முடிந்து சென்னைக்கு திரும்பினார்.

இந்த நிலையில்: நடிகர் அஜித் குமார் சென்னை அப்போலா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்குத் தான் நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர். மேலும், அஜித் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்றும் அவருக்கு ஒன்றும் ஆகக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் “வருகிற 15-ந்தேதி அஜர்பைஜான் செல்ல வேண்டியது இருப்பதால் வழக்கமான பரிசோதனைக்காக அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *