• October 21, 2026

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் முழு விவரம்

 கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் முழு விவரம்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி  பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:-

கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி ஓட்டப்பிடாரத்துக்கும், நாலாட்டின்புதூர் சுப்புராஜ் காடல்குடிக்கும்,, புதூர் விநாயகம் கழுகுமலைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

விளாத்திகுளம் முருகன் கோவில்பட்டி மேற்கு, திருச்செந்தூர் கோவில் குமார் மணியாச்சி, மணியாச்சி நவநீதன் புதூரர், கொப்பம்பட்டி துரைசாமி விளாத்திகுளம்,  கோவில்பட்டி கிழக்கு ரவீந்திரன் பசுவந்தனை, கோவில்பட்டி மேற்கு சுகுமார் புளியம்பட்டி, மத்தியபாகம் இசக்கியப்பன் கோவில்பட்டி கிழக்கு, கழுகுமலை மாரியப்பன் குளத்தூர்,  விளாத்திகுளம் முருகேசன் கொப்பம்பட்டிக, காடல்குடி பொன்னுமுனியசாமி தட்டார்மடம், கோவில்பட்டி கிழக்கு அங்குத்தாய் தென்பாகம், , எட்டயபுரம் அங்காள ஈசுவரி சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

, எட்டயபுரம் சதீஷ்குமார் திருச்செந்தூர் தாலுகாவு, கோவில்பட்டி கிழக்கு சத்யா மாசார்பட்டி, , மாசார்பட்டி மணிமாறன் கழுகுமலை, தெர்மல்நகர் ராஜபிரபு காடல்குடி, கயத்தாறு அந்தோணி திலிப் எப்போதும்வென்றான், கோவில்பட்டி கிழக்கு அருள்மொழி திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்,

நாலாட்டின்புதூர் மாதவராஜ் எட்டயபுரம், புதியம்புத்தூர் பாலன் மத்திய குற்றப்பிரிவு, எப்போதும்வென்றான் செந்தில்வேல்முருகன் கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு அரிகண்ணன் ஆறுமுகநேரி, முத்தையாபுரம் சிவராஜா கோவில்பட்டி கிழக்கு, , 

ஆறுமுகநேரி தமிழ்செல்வன் கயத்தாறு, வேல்பாண்டியன் கோவில்பட்டி மேற்கு, தட்டப்பாறை ஷகிலா ஷானி நாலாட்டின் புதூர், புதூர் சுகந்தி சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தென்பாகம், சாத்தான்குளம் சந்தனமாரி கோவில்பட்டி கிழக்கு, திருச்செந்தூர் தாலுகா ராமச்சந்திரன் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *