சென்னை மக்களுக்கு தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்கள்
புயலால் பாதிக்கப்பட்ட சென்னை 186-வது வார்டு ராம் நகர் பகுதி மக்களுக்கு. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர .கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. .மார்கண்டேயன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அரிசி, ரொட்டி, பிஸ்கட், சர்க்கரை, துவரம்பருப்பு தண்ணீர் பாட்டில்கள் போன்ற நிவாரண பொருட்கள் தூத்துக்குடியில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த் நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி , தூத்துக்குடி மாநகராட்சி உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை விளாத்திகுளம் பேரூர் கழக வார்டு செயலாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீலாங்கரை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். தூத்துக்குடியில் இருந்து லாரி மூலம் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி, அங்கேயே முகாமிட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
அமைச்சருடன் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட உடனிருந்தனர்.







