புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
கோவில்பட்டி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் இந்த புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 8 மணிக்கு சுவாமி வீதிஉலா நடக்கிறது. கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்







