கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் வளைகாப்பு விழா
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைப்பெற்றது. இதனையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு வளைகாப்பு விழா கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.
பிறகு 11 சீர்வரிசை தட்டுகள் கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்பாள் சன்னதியில் வளைகாப்பும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர், முத்துமணி சங்கர் செய்தார். இதில் திரளான பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு வளையல் அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.







