தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி தேரோட்டம்
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கடந்த 24ம் தேதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு வாகனங்களில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 30ம் தேதி மாலை சவுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் சவுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தம்பதியர் கோலத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஆடிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தினை தாடிக்கொம்பு சண்முகவேல் மில்ஸ் குழும தலைவர்கள் வேலுச்சாமி கவுண்டர், கந்தசாமி கவுண்டர் ஆகியோர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சவுந்தரராஜ பெருமாள் சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் எழுந்தருளிய திருத்தேர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தாடிக்கொம்பில் உள்ள தேரோடும் வீதிகளில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இவ்விழாவில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னதம்பி, துணைத் தலைவர் நாகப்பன், அகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயபால்,தொழில் அதிபர் பி எம் எஸ் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளை மாலை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.







