• October 22, 2026

செந்தில் பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்து விடும் ; டி. ஜெயக்குமார் பேட்டி

 செந்தில் பாலாஜியை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்து விடும் ; டி. ஜெயக்குமார் பேட்டி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில், டி.ஜெயக்குமார் பெஞ்சமின், செம்மலை, தம்பிதுரை, பாலகங்கா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :-

மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவிருக்கும் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது,

இந்த எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வந்து பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் ஒரு குழு அமைத்து அது குறித்தும் விவாதிக்கப்பட்டது,

முக்கியமாக திமுக ஆட்சியின் அவல நிலைகள் குறித்தும், ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில், அனைத்தும் தெரிய வேண்டும் என்ற என்ற நோக்கத்தோடு தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,

செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஏ1 சிறையில் அதிகாரிகள் சென்று அவருக்கு சல்யூட் அடித்து வருகிறார்கள், இதை பார்க்கும்பொழுது ஜெயிலில் அவருக்கு வசந்த மாளிகை போல உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்,

சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு வசதி கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அமலாக்கத்துறை இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜியை பாதுகாக்க காரணம் என்ன,?

இது குறித்து ஆளுநரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது,

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க திராணி, தெம்பு, தைரியம் ஸ்டாலினுக்கு இருக்கிறதா? செந்தில் பாலாஜியை நீக்கினல் ஆட்சி போய்விடும். ஆட்சி போய்விடும் என்ற பயத்தின் காரணமாக தான் இன்னும் நீக்காமல் வைத்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

2 கோடியே 15லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்தபடி மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்காமல், ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிகளை வைப்பது இந்த விடியா மூஞ்சி அரசாங்கம் தான், தகுதி உள்ள குடும்பத் தலைவிகள், பெற முடியாதவர்கள் நிச்சயமாக அவர்களது கோபம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்,

உலக நாடுகளில் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு ஈனத்தனமான செயல் மணிப்பூர் நாட்டில் நடை பெருவது, மத்திய அரசை பொருத்தவரை உடனடியாக தலையிட்டு சுமுகமாக பிரச்சினையை தீர்க்க வேண்டும், காலம் தாழ்த்தாமல் மாநில அரசுக்கு குற்றம் செய்தவர்களுக்கு சீக்கிரமாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், ஈனத்தனமான கொடுமையான காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்,

பொன்முடி ஒரு என்ஜினையே வைத்திருக்கிறார் ஆனால் அதில் ஒரு பகுதி நிலக்கரி போல் சுரண்டி எடுத்தது தான் அமலாக்கத்துறை, இன்னும் அவருக்கு உள்ள சொத்துகளில் இது ஒரு சதவீதம் கூட வராது. இன்னும் அவருக்கு 99% சொதுக்கள் உள்ளது,

கால் சென்டரில் வரும் ஓசையை போல் யூ ஆர் இன் க்யூ என்று திமுகவில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் வரிசையில் நிற்கின்றார்கள்,

அதிமுக காலத்தில் பதவிக்கு கூட கவலைப்படாமல் தண்ணீருக்காக கர்நாடகா பதவியை விட்டுக் கொடுத்தோம், ஸ்டாலினுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை பதவி முக்கியம் அவர்களின் கேள்வி கேட்க தைரியம் இல்லை, ஸ்டாலின் அவரது அப்பாவின் வழியையே கடைபிடிக்கிறார், அவர் காலத்தில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டது, இவரது நடவடிக்கையான தமிழகமே தண்ணீர் இல்லாமல் வறண்ட காடாக மாறி உள்ளது தமிழகம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *