கோவில் விழாவில் அன்னதானம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள சீமான் அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் 38வது திருக்காட்சி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அய்யா நாராயணசாமி வாகன பவனி, மற்றும் சந்தனகுடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம். எல். ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராமர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்








