கிராம ஊராட்சிகளில் சேவை கட்டணத்தை நாளை முதல் ஆன்லைன் மூலமே பெறவேண்டும்
கிராம ஊராட்சிகளில் வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் கிராம ஊராட்சிகளில் புதிய கட்டிடத்திற்கான அனுமதி இணையதளம் மூலம் வழங்கப்படும்.
புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை tnrd.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று செலுத்தலாம். அதேபோல், புதிய கட்டிடங்களுக்கு அனுமதிப் பெற onlineppa.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இணையதளம் நாளை(11-ந் தேதி) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







