கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: இன்றைய முதல் போட்டியில் புனே கஸ்டம்ஸ் அணி வெற்றியை ருசித்தது

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது. 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறுகிறது.
போட்டியின் 3-வது நாளான இன்று 20.5.2023 (சனிக்கிழமை) காலை 7வது லீக் ஆட்டம் நடந்தது. புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 3 மற்றும் 33 வது நிமிடங்களில் புனே கஸ்டம்ஸ் அணி வீரர் பிலிக்ஸ் பா பீல்டு கோல் முறையில் இரண்டு கோல்களை போட்டு தனது அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு யாரும் கோல் போடவில்லை. இதனால் 2:0 என்ற கோல் கணக்கில் புனே கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது.
சிறந்த ஆட்டக்காரர் விருது யாஷ் குமார் கோண்டிலியா வுக்கு கிடைத்தது. ஹசன் அலி மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இன்று மாலை 5.15 மணிக்கு நடக்கும் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் பேங்க் அணியும், கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி, அணியும் மோதுகின்றன
மாலை 6.45 மணிக்கு நடக்கும் 9 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரெயில் வீல் பேக்டரி மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணிகள் மோதுகின்றன,சென்னை
இரவு 8.15 மணிக்கு 10வது லீக் ஆட்டத்தில் டெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க், மற்றும் பாம்போஸ் நிஸ்வாஸ் ஆக்கி டீம் அணி மோதுகின்றன,
