கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம் திறப்பு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நெல்லை காவேரி மருத்துவ மனை சார்பில் ரெயில் பயணிகளுக்கான அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நடந்தது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைரமுத்து வரவேற்று பேசினார். தெற்கு ரெயில்வே டிவிஷனல் மேலாளர் ஆனந்த், டிவிஷனல் வர்த்தக மேலாளர் ரதி பிரியா, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சவுந்தினி, சீனியர் டிவிசனல் மருத்துவ அதிகாரி டாக்டர் துரைராஜ், மருத்துவமனை மெடிக்கல் நிர்வாகி டாக்டர் லட்சுமணன், ரெயில் நிலைய சூப்பிரண்டு பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த சிகிச்சை மையத்தில் ரெயில் பயணிகளுக்கு அவசர கால சிகிச்சை மற்றும் முதலுதவி சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் கணேசன், மண்டல மார்க்கெட்டிங் மேலாளர் கார்த்திக் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.







