எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் அன்னதானம்

அ.தி.மு.க. பொதுசெயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை கொண்டாடினர். அந்த வகையில் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

