கோவில்பட்டியில் மாநில ஜூனியர் ஆண்கள் ஆக்கிபோட்டி தொடக்கம் ; 35 மாவட்ட அணிகள் பங்கேற்பு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி கே ஆர் கல்வி நிறுவனங்கள் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது 4 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
போட்டி தொடக்க விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம் தலைமை தாங்கினார்கள் போட்டியை கே ஆர் கல்வி நிறுவனங்கள் இயக்குனர் முனைவர் சண்முகவேல் தொடக்கி வைத்தார்.

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி சிறப்பு விருந்தினர்களுக்கு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்
முதலாவது ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அணியும் சிவகங்கை மாவட்ட அணியும் விளையாடின. இதில் 4-1 என்ற கோல்கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்றது
இந்த போட்டிகளில் மொத்தம் 35 மாவட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. 4 மைதானங்களில் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன தினமும் ஒரு மைதானத்தில் 8 போட்டிகள் வீதம் லீக் போட்டிகள் நடக்கும். மொத்தம் 64 போட்டிகள் நடக்க இருக்கின்றன



இன்று நடந்த மற்ற போட்டிகளில் ,மோதிய அணிகள் மற்றும் வெற்றி விவரம் வருமாறு:-
திருச்சி-மயிலாடுதுறை: 16-0
கிருஷ்ணகிரி-கரூர்: 4-3
வேலூர்-கடலூர்: 4-2
திருச்சி-நாமக்கல்: 5-0
ராமநாதபுரம்-நாகப்பட்டினம்: 19-0
விருதுநகர்- நீலகிரி: 0-7
புதுக்கோட்டை-தஞ்சாவூர்: 0-7
திருப்பூர்-காஞ்சீபுரம்: 7-0
அரியலூர்-ராணிப்பேட்டை: 2-0
சேலம்-ஈரோடு: 0-1
சென்னை-விழுப்புரம்: 3-2
திருவள்ளூர்-கன்னியாகுமரி: 1-0
தென்காசி- திண்டுக்கல்: 0-6
கோயம்புத்தூர்-செங்கல்பட்டு: 1-0
மதுரை- திருவண்ணாமலை: 6-0
திருநெல்வேலி- தேனி: 7-1
இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்கள் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்களாக ஒடிசாவில் நடக்கும் தேசிய போட்டியில் கலந்துகொண்டு விளையாடுவார்கள்.
இன்றைய போட்டிகள் தொடக்க விழாவில் கே ஆர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் மதிவாணன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, பேராசிரியர் ராஜேஸ்வரன், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் முனைவர் செந்தில் ராஜ்குமார், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைத்தலைவர் மணிமாறன் கே ஆர் கல்வி உடற்கல்வி இயக்குனர்கள் ராம்குமார் சிவராஜ் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்
