தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம்: பயன் அடைந்தோர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

 தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம்: பயன் அடைந்தோர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கூறப்பட்டு இருப்பதாவது:-

 தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கள அளவில் 304 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 15 இயன்முறை மருத்துவர்கள், 15 நோய் ஆதரவு செவிலியர்கள், 180 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள் 78  பேர், தொற்றா நோய்க்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் தொற்றா நோய்களுக்கான தொடர் மருத்துவ சேவைகளை வழங்குகின்றனர்.

அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது நாள் வரை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 6,259 பேரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5,024 பேரும், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் 4,574 பேரும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6,484 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7,062 பேரும், புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5,763, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4,837, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,908, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 5,249, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4,076, உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 4,414, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 6,832 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

திருச்செந்தூர் நகராட்சியில் 2,489பேர், கோவில்பட்டி நகராட்சியில் 5,902 பேர், காயல்பட்டிணம் நகராட்சியில் 2,792 பேர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் 14,765 பேர் என 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் பொதுமக்கள் 93 ஆயிரத்து 430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். மேலும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 210 நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *