கோவில்பட்டியில் 102 டிகிரி வெயில்
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கோவில்பட்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 96 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெயில் அளவு 98 டிகிரியாக உயர்ந்தது. வெப்ப காற்று வீசியதால் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வரவே பயந்தனர்,
வெப்பத்தை தணிக்கும் வகையில் நகரில் ஆங்காங்கே இளநீர் கடைகள், மோர், பதநீர், நொங்கு, குளிர்பான கடைகள் தோன்றின. மக்கள் அவற்றை அருந்தி வெப்பத்தினால் ஏற்படும் தாகத்தை ஓரளவு தணித்துகொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் அளவு சதம் அடிக்க தொடங்கி விட்டது. நேற்று 101 டிகிரியாக இருந்த வெயில் இன்று மதியம் 102 டிகிரியாக உயர்ந்தது. மதியம் ஒரு மணி வரை 98 டிகிரியாக இருந்த வெயில் பிற்பகல் 1 மணிக்கு மேல் அதிரடியாக 102 டிகிரியாக உயர்ந்தது. வெயில் தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர். மாலை 3.35 மணி அளவில் வெயில் அளவு 104 டிகிரியாக உயர்ந்தது.







