• November 13, 2024

டயர் வெடித்து கார் தீப்பிடித்தது; 4 பேர் காயத்துடன் தப்பினர்

 டயர் வெடித்து கார் தீப்பிடித்தது; 4 பேர் காயத்துடன் தப்பினர்

திருச்சி போச்சம்பட்டி சேர்ந்த பொன்னம்பலம் (வயது 78), இவரது மனைவி கீதா (68), மற்றும் சந்தோஷ் குமார் (47), டிரைவர் சாத்தப்பன் (40) ஆகியோர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தனர்.

அவர்கள் வந்த கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரியாம்பட்டி அருகே  வந்தபோது திடீரென காரின் ஒரு டயர் வெடித்தது. இதனால் கார் தாறுமாறாக ஓட தொடங்கியது.  காரில் இருந்தவர்கள் அலறினார்கள்

டிரைவர் சாத்தப்பன் சுதாரித்துக்கொண்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார், அப்போது கார் என்ஜினில் இருந்து புகை கிளம்பி சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்துகொண்டது.

இதற்கிடையே காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாலையின் நடுவே டிரைவர் நிறுத்தினார். இந்த காரில் இருந்த  காரை நடுரோட்டி நிறுத்தி விட்டார், கார் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்தது. காரில் இருந்த 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர், கார் முழுமையாக எரிந்து நாசமானது. இது பற்றி வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *