• November 13, 2024

தானியங்கி இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் பணி: ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்

 தானியங்கி  இயந்திரம் மூலம் முன்பதிவு செய்யப்படாத  டிக்கெட் வழங்கும் பணி: ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை ரெயில்வே கோட்டம், பின்வரும் ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ஏடிவிஎம்) மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்கும்  பணிக்காக (Facilitator), ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களிடமிருந்து (ஏதேனும் துறை) விண்ணப்பங்களை ரெயில்வே நிர்வாகம் வரவேற்கிறது.

1. மதுரை – 6 பேர்

2. திண்டுக்கல் -5

3. மணப்பாறை-2

4. மானாமதுரை -2

5. பரமக்குடி-1

7.புனலூர் -1

8.கொட்டாரக்கரா -1

9.திருநெல்வேலி-5

10.நாசரேத் -1

11.திருச்செந்தூர்-1

12.விருதுநகர்-2

13.கோவில்பட்டி-2

14.சாத்தூர் -2

15.சிவகாசி-2

16.சங்கரன்கோவில் -1

17.புதுக்கோட்டை-1

18.உடுமலைப்பேட்டை-1

19.பழனி-1

20.கடையநல்லூர் -1

21. கல்லிடைக்குறிச்சி-1

22. செங்கோட்டை-3

23. சேரன்மகாதேவி-1

24. கீழப்புலியூர்-1

25. அம்பாசமுத்திரம் -1

 26. பாவூர் சத்திரம்-1

27.தூத்துக்குடி-1

28. வாஞ்சி மணியாச்சி -2

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்ரெ நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதாகும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் பொதுவான நிபந்தனைகள் மேற்கண்ட ரெயில் நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் உள்ளது.  குறிப்பிட்ட ரெயில் நிலையத்தின் அருகில்  குடியிருக்கும்  ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே , அந்தந்த ரெயில் நிலையத்தில் உள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Sr.Divisional Commercial Manager.Southern Railway DRM Office Madurai-625016 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *