தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளராக எஸ்.ஆர்.பாஸ்கரன் மீண்டும் தேர்வு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்ட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது அனைத்து மாவட்ட செயலாளர்களும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்,.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ்.ஆர்.பாஸ்கரன் மீண்டும் அந்த பொறுப்பை தொடர தேர்வு செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து சரத்குமாரை எஸ்.ஆர். பாஸ்கரன் சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து பெற்றார். .மீண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பணி செய்ய பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
இதை தொடர்ந்து ஏற்கனவே இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்றும் வகையில் அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது/
அதன்படி மாவட்ட அவைத் தலைவர் அய்யம்பெருமாள் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா மாவட்ட தொண்டர் அணி செயலாளர் வி பி தனபாலன், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி ,ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ்,
கோவில்பட்டி நகரச் செயலாளர் பழனி முருகன், கயத்தார் பேரூராட்சி செயலாளர் விக்கல்ராஜ் எட்டையாபுரம் பேரூராட்சி செயலாளர் மணிராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் கருப்பசாமி, விளாத்திகுளம் நகரச் செயலாளர், ராஜமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தேர்வு செய்துள்ளார்.