• November 14, 2024

எனது பெயர் உள்ள கல்வெட்டுகளை உடைக்கலாம், மக்கள் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியாது; டி.ஜெயக்குமார் பேட்டி

 எனது பெயர் உள்ள கல்வெட்டுகளை உடைக்கலாம், மக்கள் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியாது; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் அன்னதானமும் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழக அரசு தாக்கல் செய்த வேளான் பட்ஜெட் தொடர்பாக  விவசாயிகளின் மன குமுறலை எடப்பாடி பழனிசாமி  வெளிபடுத்தியுள்ளார். வேளாண் பட்ஜெட்டை பொறுத்தவரையில், அரைத்த மாவையே அரைத்தது போல் உள்ளது. விவசாய வளர்ச்சி, விவசாயி வளர்ச்சிக்கான புதிய திட்டம் இல்லை.தோட்டக்கலை,காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்திய பின்னும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம்

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டு என்ன கூறினார்களோ அதே தான் இந்த ஆண்டும் கூறுகிறார்கள்.மக்களின் குறை  தீர்க்கும் வகையில் பட்ஜெட் அமையவில்லை

குடும்ப தலைவிக்கு ஊக்கதொகை மே மாதம் வழங்கியிருக்க வேண்டும் ஆனால் ஈரோடு தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போது அறிவித்துள்ளனர். .மேலும் அனைவருக்கும் ஊக்கத்தொகை என அறிவித்து அனைவரும் ஓட்டு போட்டு வெற்றி பெற்ற பின்னர் இன்று தகுதியான குடும்பதலைவிக்கு தருவோம் என அதை சுருக்கி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அண்ணா பெயரை எங்கும் முதல்-அமைச்சர் உபயோகிக்காமல் தனதுதந்தை பெயரையே சூட்ட நினைக்கிறார்.,எவ்வளவு தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களுடைய பெயரை  ஏன் பெவிலியனுக்கு வைக்கவில்லை. கிரிக்கெட் மைதானம் திறக்க வேண்டும் என்றால் கூட தந்தை பெயரையே சூட்டுகிறார் முதலமைச்சர்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை மாறி  எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என்று நிலை ஆகிவிட்டது.

ஆன்லைன் ரம்மியை திமுக மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாக தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது.. எனது பெயர் உள்ள கல்வெட்டுகளை உடைப்பதாக கேள்விப்பட்டேன். கல்வெட்டில் உடைக்கலாம் மக்கள் மனதில் இருந்து என் பெயரை நீக்க முடியாது.. இன்று நீங்கள் உடையுங்கள் எங்களுக்கு காலம் வரும் கல்வெட்டு கண்ணில்பட்டால் நாங்கள் பார்த்து கொள்கிறோம்

உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் திமுகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.போரில் பலியான ஈழத் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது. கடந்த காலங்களில் மத்திய அரசு ஆட்சி கவிழும் போது தான் திமுக அரசு அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது அப்போது இவர்கள் ஏன் கச்ச தீவை மீட்க போராடவில்லை .

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *