கோவில்பட்டியில் இன்று மாலை பா. ஜனதா பொதுக்கூட்டம்; எச். ராஜா பேசுகிறார்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள வாஜ்பாய் திடலில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு பா. ஜனதா அரசின் மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம் நடக்கிறது.
மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் மூத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா சிறப்புரை ஆற்றுகிறார்.
கூட்டத்தில் பா. ஜனதா மாவட்ட பொது செயலாளர்கள் வேல்ராஜ், சரவண கிருஷ்ணன், கிஷோர், நகர தலைவர் சீனிவாசன், கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்பட பலரும் பங்கேற்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தெரிவித்து உள்ளார்.
