மதுபோதையில் தகராறு: கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரியில் கட்டிட தொழிலாளி பெரிய மாரியப்பன்(வயது 55) என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(40) என்பவரும் மது அருந்திகொண்டு இருந்தனர்.
அவர்கள் இருவரும் நீண்ட நேரம் மது அருந்தியபடியே பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது..
மது போதையில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டிக்கொண்டனர், இதில் பெரிய மாரியப்பன் அறிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
நாலாட்டின்புதூர் போலீசார் நேரில் வந்து பெரிய மாரியப்பன் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ,
மோதல் சம்பவத்தில் மணிகண்டனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்த காரணத்தினால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.