கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை
பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.
நேற்று பிரதோஷம். இதனால் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. அதன்படி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.
சிவன் சன்னதிக்கு எதிர்புறம் இருக்கும் நந்தியம்பெருமானுக்கு வெவ்வேறு விதமான அபிஷேகங்கள் நடந்தன. அதை தொடர்ந்து பூஜை மற்றம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கூடி இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்,.