அ.தி.மு.க. பொதுச்செயலாளா் தேர்தல்; எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல்
அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது/
பொதுச் செயலாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.
அதிமுகவின் தோ்தல் ஆணையாளா்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:யில், அதிமுகவின் சட்டதிட்ட விதி (20), பிரிவு -2-இல் குறிப்பிட்டுள்ளவாறு அதிமுக பொதுச்செயலா் பதவிக்குக் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படுவார்.. இந்த விதிமுறைக்கு ஏற்ப பொதுச்செயலா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.” என்று கூறி இருக்கிறார்கள்,.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பி எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதனிடம் வேட்புமனுவை பெற்றுக்கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு.உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன,