தூத்துக்குடியில், புதிதாக 2 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் திறப்பு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை ரவுண்டானா அருகில் மற்றும் பாளையங்கோட்டை ரோடு சிதம்பர நகர் விலக்கு ஆகிய இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டு உள்ளன.
புதிய போக்குவரத்து சிக்னள்கள் திறப்பு நிகழச்சி இன்று காலை நடைபெற்றது கனிமொழி எம்.பி., இரண்டு போக்குவரத்து சிக்னல்களையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் .கீதாஜீவன் ,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன், ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .லோக.பாலாஜி சரவணன் பெரியசாமி அறக்கட்டளை நிறுவனர் .பா.ஜீவன் ஜேக்கப் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்,.