• November 15, 2024

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

 தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

சீர்மிகு திட்டத்தின் கீழ் குப்பை கொட்டப்படும்  நிலங்களை மீட்டெடுக்கும் வகையிலும் குப்பைகள் அனைத்தையும் தரம் வாரியாக பிரித்து அசுற்றிடும் வகையிலும் உயிரி சுரங்சு மீட்பு முறையில்  தூத்துக்குடி தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியானது மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்படி நிலத்தினை பண்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது . மாசு கலந்த காற்றினை தூய்மையாக மாற்றுவதற்கான இப்பணிகள் பகுதி பகுதியாக நடைபெற்று வருகிறது. 

மொத்துமுள்ள 586 ஏக்கரில் இதுவரை சுமார் 28 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது . தற்போது  தமிழக முதல்வர் அவர்களின் 70 வது பிறந்த தினம் மற்றும் தரத்துக்குடி : மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு தினம் ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தீர்மானிக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் 10,000 மரங்கள் நட்டு பராமரிக்க ( முடிவு செய்யப்பட்டது .மீதமுள்ள 60,000 மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் மற்றும் மாநகராட்சி பகுதியில் அமையப் பெற்றுள்ள பொது இடங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட உள்ளது . 

70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் [பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தொடங்கி வைத்தார்.முதல் மரக்கன்றை கனிமொழி நாட்டினார். தொடர்ந்து  அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நாட்டினர்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் மாமன்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உறுப்பினர்கள் கட்சியின் நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மா , பலா , கொய்பா , புளி , நவா , வேம்பூ , புங்கன் , பூவரசு கொடுக்கப்புளி , வாகை , இடும்பை , நீர்மருது , மகாகனி , தூங்குலாகை , நெல்லி , வடாச்சி , சரக்கொன்றை . தான்ட்ரிக்காய் உள்ளிட்ட 18 வகை பரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன,

மரங்களுக்கான தண்ணீரானது உரக்கிடங்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெறப்பட உள்ளது 

இது தவிர பீதமுள்ள உரக்கிடங்கு இடத்தில் விரைவில் தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் துறைமுக சபை இணைந்து மேலும் 60,000 மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது . 

மேலும் உரக்கிடங்கு பின்புறம் அமைந்துள்ள கடற்கரை பகுதி வரையிலும் முட்பதர்கள் அகற்றப்பட்டு அதிலும் மரங்களை நட்டு வைத்து புதிய கடற்கரை பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *