இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 5.1.23 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடன் இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14,70,962 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,18,724 பேர் ஆண்கள்., 7,52,023 பேர் பெண்கள்.. 215 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆவர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 ஆம் ஆண்டுக்கான பணி கடந்த 9.11.2022 முதல் 8.12.2022 வரை 90 மையங்களில் நடைபெற்றது. 9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 278961 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
1.1.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தல், இறப்பினை நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 5.1.2023 வெளியிடப்பட்டது.
மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 284. மேற்கண்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 281643 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 137647, பெண் வாக்காளர்கள் 143923 இதரபிரிவினர் 73 ஆகும். தற்போது வெயிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 0.95 சதவிகிதம் கூடுதல் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
