• November 16, 2026

Month: October 2026

செய்திகள்

எஸ்.ஐ.ஆர். மூலம் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு; திருமாவளவன்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் ராஜ்மோகன், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் […]

செய்திகள்

இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது; சுப்ரீம் கோர்ட்டு

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் முஸ்லிம் மட்டுமே. அதில், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என எந்த உட்பிரிவையும் அவர் கோர முடியாது. இட ஒதுக்கீடு சலுகைக்காக பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் சான்று வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மதம் மாறிய இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உத்தரவுக்கு எதிராக […]

சினிமா

 ‘ஜெயிலர் 2’ வெளியீடு;  ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று (அக்டோபர் 15)உலகளவில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல்வேறு விதங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வது முதல் பிரமாண்ட கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது வரை ரசிகர்களின் செயல்கள் இணையத்தில் பரவி வருகின்றன, மேலும்  ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது அங்கப்பிரதட்சணம் […]

செய்திகள்

காதலியின் தந்தையை வெட்டிக் கொன்ற வாலிபர்; போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூனம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48 வயது). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாலகுரு (42 ). இவர்களுடைய மகள் ஆர்த்தியும் (23 ), சித்தாலம்புத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் தமிழழகன் (34 ) என்பவரும் காதலித்து வந்தனர். \ இவர்களின் காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈஸ்வரன் வீட்டு ஜன்னல் வழியாக தமிழழகன் தனது செல்போன் மூலம் லைட் அடித்து […]

செய்திகள்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கு பிரிவில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் பாலசுந்தரம் (51 வயது). இவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து தினமும் காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம். இவர் காலையில் வழக்கம்போல் மாநகராட்சி அலுவலகத்துக்கு பணிக்கு வந்தார். அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள தனது அறையில் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தனர். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில்  பளு தூக்கும் போட்டி: நாங்குநேரி கல்லூரி அணி `சாம்பியன் ‘

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் பளுதூக்கும் (Weightlifting) போட்டி, கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பளுதூக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டி தொடக்க விழாவில், ஜி.வி.என். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கோதையம்மாள் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் செயலாளர் ப. மகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மைய இயக்குநரும் தலைவருமான எஸ். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, சுற்றுப்புற கிராமங்களில் 17ம் தேதி மின் தடை 

கோவில்பட்டி கோட்ட  மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி கோட்ட மின்வாரிய உபமின்நிலையங்களில் அக்டோபர் மாதத்திற்கான பராமரிப்பு பணிகள் 17ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 17 ம் தேதி  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். அந்த இடங்கள் வருமாறு:- கழுகுமலை உபமின் நிலையம்: கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, […]

செய்திகள்

மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன் ; பிரதமர்

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இணை மந்திரி பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார். பாஜக மூத்த தலைவரான எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர். வழக்கறிஞர். ஏபிவிபி அமைப்பில் இருந்துள்ளார். பிறகு பாஜக வில் இணைந்தார். 2011 சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்தார்.  2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக பதவி வகித்தார். 2020ல் தமிழக […]

செய்திகள்

சிறப்பு ‘டெட்’ தகுதி தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் ‘பெயில்’

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், ‘டெட்’ தேர்வு எழுதுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில், ஆசிரியர்களின் நலனுக்காக, தமிழக அரசின் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டியில் விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு  விஸ்வகர்ம மகாஜன சங்கத் தலைவர் எஸ்.எம் பாலமுருகேசன் தலைமை தாங்கினார்,, விஸ்வகர்ம மகாஜன சங்கம் பொருளாளர் சக்தி முருகேஷ், துணைத் தலைவர், சண்முகவேல், துணைச் செயலாளர், அந்தோணிராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர், விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள்  திறமையை வெளிப் படுத்தும் விதமாக சந்திராயன் 4, எரிமலை, காற்றாலை, பசுமை […]