‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிந்து வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, […]
தூத்துக்குடியில் கப்பல்கட்டும் தளத்துக்கான இடம் தேர்வு: உப்பள உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
தூத்துக்குடி, முள்ளக்காடு கோவளம் கடற்கரைப் பகுதியில் கோவளம் பசுவந்தரை தண்பாடு சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 500 ஏக்கர் அரசு குத்தகை நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு உப்பு உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இத் தொழிலை நம்பி சுமார் 15,000 தொழிலாளர்கள் உள்ளனர். உப்பளங்கள், அருகே உள்ள 2,000 ஏக்கர் தனியார் பட்டா உப்பளங்கள் உட்படச் சுமார் 3,000 ஏக்கர் நிலத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கைகள் […]
தமிழ் நாடு அரசு, பள்ளி கல்வித்துறை சார்பில் கோவில்பட்டி வட்டார அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டி கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நேற்று 22 ஆம் தேதிநடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் தொடர்ந்து கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி அணி மாணவிகள்தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர். இறுதிப் போட்டியில் காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 36 புள்ளிகளும் எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி 16 புள்ளிகளும் எடுத்தனர். வெற்றி […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கழுகுமலை செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கண் சிகிச்சை முகாமை கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் துவக்கி வைத்தார். கல்லூரி உதவிப் பேராசிரியர் மகாராஜன் தலைமை தாங்கினார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை முதன்மை மேலாளர் மாணிக்கம் ம மேலாளர் பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சுமார் […]
கோவில்பட்டியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம்
, கோவில்பட்டியில் முக்கிய நடைபாதை மற்றும் சாலை ஒரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அலுவலகங்களில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும், பணிகள் முழுமையாக… நடைபெறவில்லை. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகளும், தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் […]
விருதுநகர் மாவட்டம், என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம், ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற, கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், 40,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. . இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதல்-அமைச்சர் விஜய் அறிவித்த ‘லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்’ தமிழக அரசின் வாட்ஸ்-அப் எண் மூலம், முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் .அனுப்பியுள்ளார்…. அதில், என் தாய் சீனித்தாய் […]
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் கொற்கை விலக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் முருகவேல் (வயது 44..) மெக்கானிக்கான இவர் மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடந்த 31.1.2021 அன்று… இரவு மது குடித்து விட்டு ஏரல் பாரதியார் ரோட்டில் தள்ளுவண்டி கடையில் தகராறு செய்தார். இதுகுறித்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது…. உடனே போலீஸ்காரர் பொன் சுப்பையா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலைச் செந்தூர் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குப் படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கீதன், ராமர், தலைமைக்காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் செந்தூர் நகர் கடற்கரைச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இன்று (22.07.2026) அதிகாலை 4: மணியளவில் அப்பகுதியில் சோதனையிட்ட […]
கோவில்பட்டியில் பெண்ணியிடம் 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். , கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (45). இவர் கடந்த 6-ம் தேதி ராஜீவ் நகர் அருகே நின்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இச் சம்பவம் குறித்து அனிதா […]
தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் ரூ.3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக.. திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது…. ஆனால், அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன்ஜாமீன் […]







