தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 6 பேர் கைது
Oplus_16908288
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் சிக்கினர்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (27), பிரவீன் (25), ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த தனராஜ் (30), நேதாஜி நகரை சேர்ந்த ஆனந்த் (28), சாத்தூர் பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (28) மற்றும் சையத் அப்ரலி (26) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின்போது 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எதிரிகள் மீது NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்,கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 100/9514144100 என்ற அவசர உதவி எண்ணிலோ அல்லது Drug Free Tamil Nadu App மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.







