கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர்கள் நிதியுதவியுடன் மத்திய ,மாநில அரசுப்பணி தேர்வு இலவச பயிற்சி
Oplus_16908288
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் நூலகம் மற்றும் வேலைவாய்ப்பு கழகம் இணைந்து முன்னாள் மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி தலைமையேற்றார். நூலகர் முனைவர் சு.பாலா வரவேற்புரையாற்றினார். சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் தொடக்கவுரை ஆற்றினார். துளிர் IAS அகடெமி நிறுவனர் சி.மாரிமுத்து மற்றும் இணை நிறுவனர் சி.காளிதாஸ் அரசு நடத்தும் தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். வினாடி-வினா கழக பொறுப்பாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் ஆர். வீரலெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு கழக பொறுப்பாளர் க.வேல்முருகன், நூலக பொறுப்பாளர்கள் சு.பாலா, எஸ்.காந்திமதி ஆகியோர் செய்திருந்தார்கள்
தேசிய புள்ளியியல் தினம்

கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் புள்ளியியல் துறையின் சார்பில் தேசிய புள்ளியியல் தினம் மற்றும் ‘STAT” மன்ற தொடக்க விழா கல்லூரி முதல்வர் ஏ. பாண்டியராணி ‘தலைமையில் நடைபெற்றது. அவர் `STAT” மன்றத்தைத் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினர், கல்லூரி இயக்குநர் ப. மகேஷ்குமார் வாழ்த்துரையாற்றினார், துறைத்தலைவர் முனைவர் தெ.சாரதா தேவி கடந்த ஆண்டு துறையின் சார்பாக நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிட்டார்.
சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (ஒப்பந்தம்) மணிகண்டன், மீன்வள விரிவாக்கம், ( “தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான புள்ளியியல் தரவு மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களைப் புரிந்துகொள்ளுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் புள்ளியியல் துறை மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலை வாய்ப்பு உள்ளன என்பதை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இவ்விழா ஏற்பாடுகளைக் கல்லூரிச் செயலர், முதல்வர், இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் புள்ளியியல் துறைப் பேராசிரியர்கள் தெ. சாரதா தேவி, ரா. வெங்கடேஸ்வரா, சு. மகாலட்சுமி, மு. மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.







