கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் பகுதியில் புதிதாக் பட்டாசு அலை தொடங்க அனுமதி அளித்தால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது, கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை நடந்த : ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத.மா.கா. தலைவர் தலைவர் என்.பி,.. ராஜகோபால் தலைமை தாங்கினார் வட்டாரத் தலைவர் கனி ராஜ் கயத்தார் வட்டாரத் தலைவர் பூல் பாண்டியன் மாவட்டத் துணைத் தலைவர் பி முத்துசாமி திருமுருகன் மாவட்ட பொதுச்செயலாளர் அய்யாதுரை […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கவர்னர் ஆற்றிய உரையில் மாற்றம் எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தவெக அரசின் முதல் கவர்னர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இருந்ததுதான் கவர்னர் உரையிலும் இருந்தது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாட்களில் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகளும், […]
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல முழு தடை விதிக்கப்படுவதாகவும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினுள், பக்தர்கள் செல்போன்களை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில். கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி (Mobile Phone) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேற்படி நீதிமன்ற உத்தரவை […]
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து கடந்த 2008-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அந்த அரசாணையை மீறி பல பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டுப்பாடும் இன்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் பெற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் […]
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், 17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, காலை 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்த கவர்னர் அர்லேகருக்கு, பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் கவர்னரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, சிவப்பு கம்பளத்தில் […]
10-ம் வகுப்பு மாணவிக்கு தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 101 மதிப்பெண்கள்; மறுகூட்டலுக்காக விடைத்தாளை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி ஒருவர் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுத்து இருந்தாலும் தமிழ்ப் பாடத்தில் 91 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. எனவே அவர் மறு கூட்டலுக்காக விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். விடைத்தாள் நகல்கள் நேற்று வெளியிடப்பட்டன. விடைத்தாளை பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார் காரணம் அவருடைய தமிழ்ப்பாட விடைத்தாளின் […]
சங்கர் ஜிவால், ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக டிஜிபியாகசங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இருந்தபோதிலும், ஓய்வு பெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பே அப்போதைய திமுக அரசு அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியது. அதாவது, தீயணைப்புத் துறை ஆணையத் தலைவர் பொறுப்பில் சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். காவல் துறை ஆணையம் போல் தீயணைப்பு […]
கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நிகழ்ந்த பள்ளியில் சிறுமி […]
தூத்துக்குடியில் ரூ.38 ஆயிரம் கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம்; விரைவில் செயல்படுத்த
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில், HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர். தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட HD ஹுண்டாய் நிறுவனம், உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைப்பதற்காக இந்த நிறுவனம் தமிழ்நாடு […]
ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டி மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது, ஜெயலலிதா இறப்புக்கு பின்ன்ர் அதிமுக ஆட்சிமாறி திமுக பொறுப்பு ஏற்றபோதும் இந்த திட்டம் தொடரப்பட்டது, தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வரும் நிலையிலும் அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. கோவில்பட்டியில் […]







